நடிகராக அறிமுகமான போது பல இன்னல்களை சந்தித்தவர் தனுஷ்.
அவற்றையெல்லாம் முறியடித்து தேசியளவில் சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டு இன்று ஹாலிவுட் செல்லும் அளவுக்கு உயர்ந்து இருக்கிறார்.
நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் உயர்ந்து தமிழ் சினிமாவுக்கு தேசிய விருதுகளை அள்ளிக் கொண்டு வருகிறார்.
மேலும் பாடல் ஆசிரியர், பாடகர் என சினிமாவின் பல்வேறு துறைகளிலும் ஆட்சி செய்து வருகிறார்.
இந்நிலையில் இதற்கு மகுடம் சூடும் விதமாக தற்போது இயக்குனராகவும் மாறவிருக்கிறாராம்.
இவர் இயக்கவுள்ள படத்தில் ராஜ்கிரண் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
மற்ற நடிகர், நடிகையர் தேர்வானபின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
ஹரி இயக்கிய வேங்கை படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றியது தங்களுக்கு நினைவிருக்கலாம்.
0 comments:
Post a Comment