பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள தொடரி திரைப்படம் வருகிற செப். 22ஆம் தேதி வெளியாகிறது.
இப்படம் தொடர்பான புரோமோஷன் நிகழ்ச்சிகளில் இப்படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தனுஷிடம் ஒரே நேரத்தில் நிறைய படங்களில் எப்படி நடிக்கிறீர்கள்?
இவை தவிர்த்து, தயாரிப்பு, இயக்கம்.. இது எல்லாம் எப்படி சாத்தியம்? என கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளிக்கும்போது தனுஷ் கூறியதாவது…
‘நான் எனது தொழிலை வேலையை காதலிக்கிறேன். எனவே அதன் மீது விருப்பம் உள்ளதால் சோர்வடைவதில்லை.
அண்ணன் செல்வராகவன் கொடுத்த தைரியத்தால்தான் இயக்குனராக முடியும் என முடிவெடுத்தேன் என்று தெரிவித்தார்.
0 comments:
Post a Comment