பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் படம் தொடரி. இப்படத்தில் தனுஷ் பூச்சியப்பன் எனும் கதாபாத்திரத்தில் ரயில் நிலையத்தில் வேலை செய்யும் சமையல்காரராக நடித்துள்ளார். கீர்த்தி சுரேஷ், சரோஜா எனும் கதாபாத்திரத்தில் நடிகைக்கு மேக்கப் போடும் கேரள பெண்ணாக நடித்துள்ளார்.
அண்மையில் இப்படம் தொடர்பாக பத்திரிக்கையாளர்களை சந்தித்த இயக்குனர் பிரபு சாலமன், இப்படம் செப்டம்பர் 16-ம் தேதி வெளியாகிவிடும் எனவும் எனினும் சென்சார் முடிந்த பிறகே ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment