தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் வட சென்னை. இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சிறைச்சாலை போன்ற செட் ஒன்று போடப்பட்டு அதில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
ஆனால் படம் பார்க்கும்போது எந்த இடத்திலும் இது செட் என்றே தெரியாதாம். அந்த அளவுக்கு ஜெயில் கதவுகளில் இருந்து எல்லாமே மிகவும் தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளதாம். இதுதான் இப்படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment