‘விஐபி 2′, பிரபுசாலமன் படங்களைத் தொடர்ந்து தனுஷ் நடிக்கும் புதிய படத்தை காக்கிசட்டை புகழ் துரை செந்தில்குமார் இயக்கவுள்ளார். இதில் தனுஷுடன் இணைந்து நடிக்க ‘எதிர்நீச்சல்’ சதீஷ் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் தனுஷுடன் ஏற்கனவே நய்யாண்டி, ‘விஐபி 2′ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இதில் ‘விஐபி 2′ வரும் அக்டோபரில் வெளியாகவுள்ளது. அதுமட்டுமல்லாமல் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கன்னட சூப்பர்ஸ்டார் சுதீப் நடிப்பில் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படத்திலும் இவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
அறிமுகமான ஒருசில படங்களிலேயே விஜய், தனுஷ், சுதீப் போன்ற ஸ்டார் நடிகர்களின் படங்களில் நடித்து வளரும் நகைச்சுவை நடிகர்களின் பட்டியலில் முன்னணியில் இருக்கும் இவர் மென்மேலும் பல உயரங்கள் தொட வாழ்த்துகிறோம்.
0 comments:
Post a Comment