பொல்லாதவன், ஆடுகளம் வெற்றியைத் தொடர்ந்து தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி மூன்றாவது முறையாக இணையவிருக்கும் படம் வட சென்னை. பீரியட் படமான இதில் நடிகர் தனுஷ் மூன்று விதமான கெட்டப்பில் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஸ்வரூபம், பாகுபலி பாணியில் இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. இதில் முதல் பாகம் அடுத்த ஆண்டும் இரண்டாம் பாகம் அதற்கடுத்த ஆண்டும் வெளியாகும் என சொல்லப்படுகிறது. தனுஷ் தயாரித்து நடிக்கும் இப்படத்தில் சமந்தா அவரது ஜோடியாக நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.
0 comments:
Post a Comment