பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் பெயரிடாத புதிய படத்தில் தனுஷின் ஜோடியாக கீர்த்தி சுரேஷும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் கயல் ஆனந்தியும் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் பிசாசு புகழ் ஹரிஷ் உத்தமன் இப்படத்தில் வில்லனாக நடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் கதை டெல்லியிலிருந்து கன்னியாகுமரி வரும் ரயிலில் நடப்பதுபோல் உருவாக்கப்பட்டுள்ளது. ரயிலில் இயங்கும் கேண்டீனில் வேலைசெய்யும் ஊழியராக தனுஷும் பயணியாக கீர்த்தி சுரேஷும் நடித்து வருகிறார்கள். இமான் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.
0 comments:
Post a Comment