பிரபல பிரெஞ்சு இயக்குனர் மார்ஜனே சத்ரபி இயக்கும் ஹாலிவுட் படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவிருப்பதும் இப்படம் Romain Puertolas எழுதிய “The Extraordinary Journey Of The Fakir Who Got Trapped In An Ikea
Wardrobe” எனும் புகழ்பெற்ற பிரெஞ்சு நாவலை அடிப்படையாக்கொண்டு உருவாகவிருப்பதும் நாம் ஏற்கனவே
அறிந்ததுதான்.
Wardrobe” எனும் புகழ்பெற்ற பிரெஞ்சு நாவலை அடிப்படையாக்கொண்டு உருவாகவிருப்பதும் நாம் ஏற்கனவே
அறிந்ததுதான்.
இந்நிலையில் இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் தனுஷ் பிரபுசாலமன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக அவர் ‘எதிர்நீச்சல்’ துரை செந்தில்குமார் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்கி மார்ச் இறுதிக்குள் முடிந்துவிடும் என சொல்லப்படுகிறது.
அதன்பின்னரே தனுஷ் ஹாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்துக்காக அவர் தொடர்ந்து 60 நாட்கள்வரை கால்ஷீட் வழங்கியுள்ளார். இந்த படம் முடிந்த பிற்பாடுதான் அவர் வெற்றிமாறனின் வட சென்னை படத்தில் நடிக்கவுள்ளார்.
0 comments:
Post a Comment