திரையுலகில் சிலர் ஒரு துறை கைகொடுக்காவிட்டால் மறு துறையில் கால் பதிக்க நினைப்பார்கள். ஆனால் ஒரே சமயத்தில் நடிகர், பாடகர், பாடல் ஆசிரியர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு அனைத்திலும் வெற்றி பெற்று வருபவர் தனுஷ். தற்போது தமிழ் சினிமாவை தாண்டி பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் ரஜினிக்கு அடுத்ததாக ஹாலிவுட் படத்தில் நடிக்கவிருக்கும் ஒரே தமிழ் நடிகர் தனுஷ் மட்டுமே.
தற்போது வேல்ராஜ் இயக்கத்தில் ‘விஐபி-2’, பிரபுசாலமன் இயக்கத்தில் ஒரு படம் என பிஸியாக நடித்து வருகிறார் தனுஷ். இதனைத் தொடர்ந்து சிவகார்த்தியேகன் நடித்த ‘எதிர்நீச்சல்’ மற்றும் ‘காக்கி சட்டை’ ஆகிய படங்களை இயக்கிய துரைசெந்தில்குமார் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.
இதுவரை 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தாலும் தனுஷ் இதுவரை இரட்டை வேடங்களில் நடித்தது இல்லை. எனவே புதிய முயற்சியாக அதுவும் இரட்டையராக நடிக்கவிருக்கிறாராம். தனுஷிற்காகவே இப்படி ஒரு கதையை உருவாக்கினாராம் துரை செந்தில்குமார். இப்படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பாக தயாரிக்கிறார். இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.

0 comments:

Post a Comment

 
Top