‘மாரி’ படத்திற்கு பிறகு தொடர்ந்து இரண்டு மூன்று படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார் தனுஷ். வேல்ராஜ் இயக்கிய ‘விஐபி-2’ படத்திலும் பிரபு சாலமன் இயக்கத்திலும் நடித்து வருகிறார். ஆனால், இன்னும் முழுமையாக இதன் படப்பிடிப்பு முடியாத நிலையில் தற்போது தனது அடுத்த படத்திற்கும் தயாராகி வருகிறார். இதனையடுத்து சிவகார்த்திகேயன் நடித்து தனுஷ் தயாரித்த ‘எதிர்நீச்சல்’, ‘காக்கி சட்டை’ படங்களை தொடர்ந்து இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ். இதில் இவர் இருவேடமேற்கிறார். இதில் அண்ணன் தனுஷூக்கு ஜோடியாக நடிக்க முதலில் வித்யாபாலனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அவர் மறுக்கவே, பின்னர் லட்சுமிமேனனை ஒப்பந்தம் செய்திருப்பதாக தெரிகிறது. தற்போது தம்பி தனுஷூக்கு ஜோடியாக அஜித் மனைவி ஷாலினியின் தங்கை ஷாம்லி நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில்தான் ஷாம்லி, ஒரு புதிய படத்தில் விக்ரம்பிரபு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகினார். தொடர்ந்து தற்போது தனுஷ் உடன் நடிக்கவிருக்கிறார். எனவே, தமிழில் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் தன் திரையுலக பயணத்தை தொடங்கவிருக்கிறார் ஷாம்லி.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment