தனுஷ் கோலிவுட்டை கலக்கியது இல்லாமல் பாலிவுட்டையும் கலக்கி வருகிறார். விரைவில் ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்கான முயற்சியிலும் இறங்கியுள்ளார். மேலும் நடிகர், தயாரிப்பாளர், பாடகர் என மனிதர் பிஸியாகி விட்டார்.
தற்போது வேல்ராஜ் இயக்கத்தில் ‘விஐபி-2’, பிரபுசாலமன் இயக்கத்தில் ஒரு படம் என பிஸியாக நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து தனுஷ் தயாரித்து சிவகார்த்திகேயன் நடித்த ‘எதிர்நீச்சல்’ மற்றும் ‘காக்கி சட்டை’ ஆகிய படங்களை இயக்கிய துரைசெந்தில்குமார் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் தனுஷ்.
இதில் இரட்டை வேடத்தில் நடிக்கவிருப்பதால் அண்ணன் தனுஷிற்கு ஜோடியாக நடிக்க வித்யாபாலனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. ஆனால் அந்த முயற்சி தோல்வி அடையவே, அவருக்குப் பதிலாக லட்சுமிமேனனை தனுஷின் ஜோடியாக நடிக்க வைக்கவிருக்கிறார்களாம். மேலும் இது தொடர்பாக லட்சுமிமேனனிடம் பேசிவிட்டதாகவும், அவரும் தனுஷூடன் நடிக்க ஆர்வமாக உள்ளதாகவும் தெரிவித்து விட்டாராம். எனவே, விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

0 comments:

Post a Comment

 
Top