தனுஷ் தற்போது பிரபு சாலமன் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் அடுத்து எதிர்நீச்சல் மற்றும் காக்கிச்சட்டை படத்தை எடுத்த துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற செய்தி சமீபத்தில் தெரிவித்து இருந்தோம், அப்படம் உறுதியானது பற்றி தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கிறேன், மேலும் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக தற்போது ஷாமிலி (அஜித் மச்சினிச்சி) தேர்வு செய்துள்ளோம்.
மேலும் இப்படத்தை க்ராச்ஸ்ரூட் சார்பாக வெற்றிமாறனும் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் அவர்களும் இணைத்து தயாரிக்க உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் முடிவில் தொடங்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment