‘காக்கிசட்டை’ துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் ஒரு புதிய படத்தில் நடிக்கப்போவது நாம் அனைவரும் அறிந்ததுதான். இப்படத்தில் தனுஷ் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார். இதில் ஒரு தனுஷுக்கு ஜோடியாக நடிக்க அஜித்தின் மச்சினிச்சியும் ஷாலினியின் தங்கையுமான ஷாம்லி கமிட்டாகியுள்ளார். இவர் அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததற்காக தேசிய விருது பெற்றவர்.
இன்னொரு தனுஷுக்கு ஜோடியாக நடிக்க லக்ஷ்மி மேனனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் பிலிம் கம்பெனியுடன் இணைந்து தயாரிப்பாளர் மதனின் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை கூட்டாக தயாரிக்கிறது.
0 comments:
Post a Comment