பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த ஜூலை 17-ம் தேதியன்று வெளியான மாரி திரைப்படம் இன்றைய தேதிவரை ரூ. 60 கோடிக்கும் மேலாக வசூல் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தனுஷ் கேரியரில் அதிகப்பட்ச வசூல் செய்த படமாக மாரி உருவெடுத்துள்ளது.
மாரி வெற்றியைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் பிரபுசாலமன் இயக்கும் புதிய படத்தில் சத்தமே இல்லாமல் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது சென்னை பின்னிமில்லில் நடைபெற்று வருகிறது. தனுஷ் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இப்படத்துக்கு டி. இமான் இசையமைத்து வருகிறார்.
0 comments:
Post a Comment