‘விஐபி-2’ படத்தை முடித்துவிட்டு தனுஷ் தற்போது பிரபு சாலமன் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் இருவேடங்களில் நடிக்க இருக்கிறேன் என்பதை தனுஷே தன் ட்விட்டர் பக்கத்தில் உறுதியாக தெரிவித்திருந்தார்.
மேலும் அண்ணன் தனுஷூக்கு ஜோடியாக லட்சுமிமேனனும். தம்பி தனுஷூக்கு ஜோடியாக அஜித் மனைவி ஷாலினியின் தங்கை ஷாம்லி நடிக்கவுள்ளனர். ஆனால் லட்சுமி மேனன் கேரக்டரில் முதலில் நடிக்க வித்யாபாலனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவரிடம் கால்ஷீட் இல்லை, தேதி ஒத்துவரவில்லை என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது புதிய தகவல் ஒன்று வந்துள்ளது.
சில வருடங்களுக்கு முன்பு கோலிவுட் படங்களில் நடிக்க முயற்சி செய்தார் வித்யாபாலன். ஆனால் அப்போது இவரை யாரும் கண்டுக் கொள்ளவில்லை. பின்னரே இந்திக்கு சென்று அங்கு தன் வெற்றிக் கொடியை நாட்டினார். தற்போது இவரை தேடி கோலிவுட் வாய்ப்புகள் வந்துள்ள நிலையில் மறுபடி தமிழ் சினிமாவுக்கு திரும்பினால் அது பெரிய ஓப்பனிங்காக இருக்க வேண்டும் என நினைக்கிறாராம். அதனால்தான் தனுஷ் படத்தை மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
மணிரத்னம் இயக்கிய ‘குரு’, சந்தோஷ் சிவன் இயக்கிய ‘உறுமி’ படங்களில் நடித்திருந்தார் வித்யாபாலன் என்பது குறிப்பிடத்தக்கது.
மணிரத்னம் இயக்கிய ‘குரு’, சந்தோஷ் சிவன் இயக்கிய ‘உறுமி’ படங்களில் நடித்திருந்தார் வித்யாபாலன் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment