சமீபகாலமாக மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன திரைப்படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்படும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. மணிசித்திரதாழ் திரைப்படம் சந்திரமுகியாக ரீமேக் செய்யப்பட்டதில் தொடங்கி த்ரிஷ்யம், பெங்களூர் டேய்ஸ் ஆகிய சூப்பர் ஹிட் படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நிவின்பாலி, நடிப்பில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் திரைப்படம் மலையாளத்தில் சூப்பர்ஹிட் ஆகியது. வெறும் ரூ.4 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படம் ரூ.58 கோடி வசூல் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
வித்தியாசமான காதல் கதையான இந்த படத்தின் நாயகன் வேடத்திற்கு சூர்யா, தனுஷ் இருவருமே பொருத்தமாகத்தான் இருப்பார்கள் என்றும் இருவரின் யார் நடித்தாலும் இந்த படம் சூப்பர் ஹிட் ஆவது உறுதி என்றும் கூறப்படுகிறது.
எனவே இந்த படத்தை வழக்கம்போல் தமிழில் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பெற பலத்த போட்டி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இயக்குனர் கவுதம்மேனன் இந்த படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்க விருப்பம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தில் நிவின்பாலி கேரக்டரில் நடிக்க தனுஷ் மற்றும் சூர்யா ஆகிய இருவரிடையே பலத்த போட்டி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் உரிமையை பெற ஸ்டுடியோ க்ரீன் நிறுவனமும் முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
வித்தியாசமான காதல் கதையான இந்த படத்தின் நாயகன் வேடத்திற்கு சூர்யா, தனுஷ் இருவருமே பொருத்தமாகத்தான் இருப்பார்கள் என்றும் இருவரின் யார் நடித்தாலும் இந்த படம் சூப்பர் ஹிட் ஆவது உறுதி என்றும் கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment