பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை பின்னிமில்லில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் தனுஷ் ஜோடியாக ‘ரஜினி முருகன்’ புகழ் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.
இந்நிலையில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ‘கயல்’ ஆனந்தி ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் இயக்குனர் பிரபு சாலமனால் கயல் படத்தில் அறிமுகம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்சமயம் இவர் சண்டிவீரன், த்ரிஷா இல்லைனா நயன்தாரா, பண்டிகை ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

0 comments:

Post a Comment

 
Top