‘மாரி’ தனுஷின் 32வது படமாக வந்துள்ளது. ரம்ஜான் ரேஸில் தனியாக களம் இறங்கியுள்ளது. இது ரசிகர்களுக்கு வெறித்தனமான ஸ்பெஷல் விருந்தாக அமைந்துள்ளதா என்பதை பார்ப்போம்…
நடிகர்கள் : தனுஷ், காஜல் அகர்வால், விஜய் ஜேசுதாஸ், ரோபா சங்கர், காளி வெங்கட், வினோத், ஸ்ரீரஞ்சனி. சண்முகராஜன் மற்றும் பலர்
இசையமைப்பாளர் : அனிருத்
ஒளிப்பதிவு : ஓம் பிரகாஷ்
வசனம் : பாலாஜி மோகன்
இயக்கம் : பாலாஜி மோகன்
தயாரிப்பு : ஆர்.சரத்குமார், ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன்
இசையமைப்பாளர் : அனிருத்
ஒளிப்பதிவு : ஓம் பிரகாஷ்
வசனம் : பாலாஜி மோகன்
இயக்கம் : பாலாஜி மோகன்
தயாரிப்பு : ஆர்.சரத்குமார், ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன்
கதைக்களம்…வடசென்னையில் வாழும் ‘மாரி’ (தனுஷ்) விதவிதமான புறாக்களை வளர்த்து அதை ரேஸில் பறக்கவிட்டு ஒவ்வொரு முறையும் ஜெயிக்கிறார். இவரின் நண்பர் கம் அடியாள் ரோபா சங்கர். மாரிக்கு பிரபல செம்மரக்கடத்தல் தாதா சண்முகராஜனின் ஆதரவு இருப்பதால் கலாட்டா செய்து மாமூல் வாங்கி லோக்கல் தாதாவாகிறார். இடையில் நாயகி காஜலின் காதல் வந்து போகிறது.
ஒரு முறை புறா பந்தயத்தில் மற்றொரு ரவுடி கும்பலுடன் மோத இவர்களது பகை தீராப் பிரச்சினையாகிறது. இந்நிலையில் போலீஸ் விஜய் யேசுதாசும் அந்த கும்பலும் கூட்டுச் சேர்ந்து சதி செய்து தனுஷ் மற்றும் சண்முகராஜனை சிக்கவைத்து ஜெயிலில் அடைக்கின்றனர். பின்னர் விடுதலையாகி வரும் ‘மாரி’ இவர்களின் சதி திட்டங்களை எப்படி முறியடிக்கிறார்? காதல் கை கூடியதா? ஆகியவற்றை தர லோக்கலும், கெத்துமாக கூறியிருக்கிறார் இயக்குனர்.
கதாபாத்திரங்கள்…
கேரக்டர்கள் என்பதைவிட ‘மாரி’ என்று ஒற்றை வார்த்தையில் சொல்லிவிடலாம். அறிமுக காட்சியே அசத்தல்தான். கூலிங் க்ளாஸ், கழுத்தில் நகைக் கடை, முறுக்கிய மீசை, தம்மடிக்கும் ஸ்டைல் படம் முழுக்க தனுஷ் ராஜ்ஜியம்தான். வீராப்பு காட்டி நடித்த ‘சுள்ளான்’, ‘புதுப்பேட்டை’ படம் ஒரு ரகமென்றால் இது வேற ‘மாறி’ ரகம்.
கேரக்டர்கள் என்பதைவிட ‘மாரி’ என்று ஒற்றை வார்த்தையில் சொல்லிவிடலாம். அறிமுக காட்சியே அசத்தல்தான். கூலிங் க்ளாஸ், கழுத்தில் நகைக் கடை, முறுக்கிய மீசை, தம்மடிக்கும் ஸ்டைல் படம் முழுக்க தனுஷ் ராஜ்ஜியம்தான். வீராப்பு காட்டி நடித்த ‘சுள்ளான்’, ‘புதுப்பேட்டை’ படம் ஒரு ரகமென்றால் இது வேற ‘மாறி’ ரகம்.
தாதா கேரக்டர் என்றாலும் வெட்டுக்குத்து, வீச்சரிவாள், படம் முழுக்க பைட் என்றில்லாமல் கெத்து காட்டி நடித்திருக்கிறார். இவரின் பெண் ரசிகைகளுக்கும் நிச்சயம் பிடிக்கும். (தியேட்டரில் லேடீஸ் விசில் வேற)
படத்தில் காதலுக்கும் வேலையில்லை. காஜலுக்கும் வேலையில்லை. அழகாக வந்துப் போகிறார். மன்னிப்பு கேட்கும் காட்சிகளில் வசனத்தை மனப்பாடம் செய்துள்ளதாய் தெரிகிறது. நடிகராக அறிமுகமாகியிருக்கிறார் விஜய்யேசுதாஸ். ஜஸ்ட் பாஸ் மார்க் போடலாம். கம்பீரம் இல்லை.
ரோபா சங்கர் காமெடியில் முத்திரை பதித்து இருக்கிறார். இவருடன் வரும் அடிதாங்கி வினோத்தும் அசத்தியுள்ளார். அடிக்கடி தனுஷை கலாய்ப்பதும் நக்கல் அடிப்பதும் என ஸ்கோர் செய்துள்ளார் ரோபோ. தனுஷின் புகழ்பெற்ற வசனமான ‘பார்த்த பிடிக்காது… பார்க்க பார்க்க பிடிக்கும்…’ என்ற டயலாக்கையும் அருமையாக கலாய்த்து இருக்கிறார்.
சண்முகராஜன், காளி வெங்கட், ஸ்ரீரஞ்சனி என ஒவ்வொருவரும் அவரவர் பாத்திரங்களை நிறைவாக செய்துள்ளனர். இதில் காளிவெங்கட் முதலிடம் பெறுகிறார்.
தன் நண்பரின் படம் என்பதால் என்னவோ பாடலை விட பின்னணி இசையில் செமயாய் பின்னி பெடலெடுத்துள்ளார் அனிருத். ஒரு பாடலில் இவர் தோன்றி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார். தனுஷின் மாஸ் காட்சிகளில் அனல் பறக்க செய்து சற்று இரைச்சலையும் கொடுத்திருக்கிறார்.
ஏற்கெனவே பாடல் வந்து ஹிட்டடித்துள்ள நிலையில் ரசிக்கும்படியாக குத்தும், நடனமும் காட்சிகளும் அமைந்துள்ளது. தப்பாதான் தெரியும்… பாடல் செம மாஸ்… தனுஷின் குரலும்.. விக்னேஷ் சிவனின் பாடல் வரியும் தெறிக்குது. ஆனால் டானு… டானு.. பாடலிலும் காஜலுக்கு வேலையில்லாமல் செய்துவிட்டார் இயக்குனர்.
ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் புறாக்கள் காட்சிகள் அருமை. மற்ற காட்சிகள் மெச்சுப்படியாக இல்லையென்றாலும் குறையொன்றுமில்லை.
காதலில் சொதப்புவது எப்படி? வாயை மூடி பேசவும் ஆகிய படங்களைத் தந்தவரின் ஆக்ஷன் படம் இது. தனுஷை வேற மாறி காட்ட முற்பட்டிருக்கிறார். அதில் பாஸ் மார்க்கும் பெற்றுள்ளார். நிறைய மெனக்கெட்டு தனுஷ் ரசிகர்களுக்காகவே கொடுத்துள்ளார். கதையில் ட்விஸ்ட் வைத்திருக்கலாம்.
மாரி லோக்கல் தாதாவாகி விட்டார். அவரிடம் பெரிய ஆள் பலமில்லை. வசதியில்லை. ஆனால் அந்த ஏரியாவை கட்டுக்குள் வைத்திருப்பது எப்படி? அதற்கான பெரிய காரணங்கள் இல்லை. குற்றத்திற்கான ப்ளாஸ்பேக் காட்சியிலும் வலு இல்லை.
மொத்தத்தில் ‘மாரி’… தனுஷை கொஞ்சம் வேற ‘மாறி’ பார்க்கலாம்.
0 comments:
Post a Comment