பொல்லாதவன், ஆடுகளம் வெற்றியைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் வட சென்னை படத்தை இரு பாகங்களாக உருவாக்க திட்டமிட்டுள்ளனர். முதல் பாகம் வெளியான ஒருசில நாட்களில் இதன் இரண்டாம் பாகம் வெளியாகுமாம்.
முதல் பாகத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளது. தனுஷ் தயாரித்து நடிக்கும் இப்படத்தில் அவரது ஜோடியாக சமந்தா நடிக்கவுள்ளார். சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைக்கிறார். இதற்கிடையில் எதிர்நீச்சல் துரை செந்தில்குமார் இயக்கும் ஒரு குறுகிய கால படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்குகிறது.
0 comments:
Post a Comment