‘மாரி’ படத்தை தொடர்ந்து வேல்ராஜ் இயக்கத்தில் ‘விஐபி-2’ படத்தில் நடித்து முடித்துள்ளார் தனுஷ். இதனை தொடர்ந்து பிரபுசாலமன் இயக்கும் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இமான் இசையமைக்க வி. மகேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.
இதனைத் தொடர்ந்து துரைசெந்தில்குமார் இயக்கும் படத்தில் இரட்டைவேடங்களில் நடிக்கிறார். இப்படத்தில் அண்ணன் தனுஷிற்கு ஜோடியாக நடிக்க வித்யாபாலனிடம் பேச்சுவார்த்தை நடக்கிறதாம். இதனிடையில் தலா ஒரு பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் நடிக்கவிருக்கிறார் தனுஷ்.
இதனையடுத்து ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ படத்தில் இணைந்த வெற்றிமாறனுடன் ‘வட சென்னை’ படத்திற்காக பணியாற்றவுள்ளார். இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக சமந்தா நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு குறைந்தது ஏழு மாதங்களுக்கு நடக்கவிருக்கிறதாம்.
பிரம்மாண்ட படங்களை இயக்கும் ஷங்கரின் படப்பிடிப்புகள்தான் வெகுநாட்களாக நடைபெறும். முதன் முறையாக ஷங்கர் பாணியில் தனுஷின் படப்பிடிப்பும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Top