‘காதலில் சொதப்புவது எப்படி?’ மற்றும் ‘வாயை மூடி பேசவும்’ ஆகிய படங்களை தொடர்ந்து பாலாஜி மோகன் இயக்கிய படம் ‘மாரி’. இப்படத்தில் தனுஷுடன் காஜல், ரோபா சங்கர், விஜய் யேசுதாஸ் உள்ளிட்டோர்
நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்த இப்படத்தை ராதிகா சரத்குமார்
தயாரித்திருந்தனர். இப்படம் தனுஷ் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து ஹிட்டடித்தது.
ஒரு படம் வெற்றிப் பெற்றாலே இரண்டாம் பாகம் உருவாகும் இந்த சீசனில்
இப்படம் மட்டும் விதிவிலக்கா என்ன? எனவே இப்படத்திற்கு
இரண்டாம் பாகம் தயாராகவுள்ளதாம். இரண்டாம் பாகத்தையும் பாலாஜி மோகனே இயக்க
ஒப்பந்தமாகியிருக்கிறார்.
தற்போது அதற்கான கதையை உருவாக்கி வருகிறாராம். மேலும் முதல் பாகம்
வெற்றியடைய காரணமாக இருந்த ரோபா சங்கர் முக்கியமாக இடம் பெறுவார் எனத் தெரிகிறது.
ஆனால் ஒரு சில நடிகர், நடிகைகளில் மாற்றம் இருக்கும் எனவும்
கூறப்படுகிறது.
ஆனால் தற்போது தனுஷ் கைவசம் உள்ள படங்களை முடிக்கவே இன்னும் ஓராண்டு
காலம் ஆகும் என்பதால் இப்படத்தை 2017ஆம் ஆண்டு
ஜனவரியில் தொடங்கவிருக்கிறார்களாம். இதனிடையில் பாலாஜி மோகன் வேறு ஒரு புதிய
படத்தை இயக்கவிருக்கிறாராம்.
0 comments:
Post a Comment