இந்த தீபாவளி… கமல் அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுக்க போகிறது. அன்றைய தினம் கமல் நடித்த ‘தூங்காவனம்’ படமும் அஜித் நடித்த ‘வேதாளம்’ படமும் வெளியாகிறது. இவர்களைப்போல மற்ற நடிகர்களின் ரசிகர்களும் மகிழ்ச்சி கொள்ளும் வகையில் ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.
ரஜினி தற்போது நடித்து வரும் ‘கபாலி’ படத்தின் போஸ்டர்களை இதே நாளில் வெளியிடவிருக்கிறார்களாம். மேலும் அட்லி இயக்கும் ‘விஜய் 59’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை அன்றைய தினமே வெளியிடவிருக்கிறார்களாம்.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களின் படம் சம்பந்தமாக செய்திகள் வரும்போது இளம் நட்சத்திரங்கள் சும்மா இருந்துவிடுவார்களா? எனவே, அவர்களும் இந்த தீபாவளி களத்தில் குதிக்கிறார்களாம்.
தனுஷ் நடித்த ‘தங்க மகன்’ படத்தின் பாடல்களையும், பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ‘இது நம்ம ஆளு’ படத்தின் பாடல்களையும் தீபாவளி திருநாளில் வெளியிட இருக்கிறார்கள் என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. எனவே இந்த தீபாவளி என்றும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய திருவிழாவாக மாறப்போகிறது என்பதே உண்மை

0 comments:

Post a Comment

 
Top