தனுஷ் – அனிருத் கூட்டணியில் உருவாகவிருக்கும் தங்கமகன் படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியானது. ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்த ஆல்பம் திரை பிரபலங்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. அந்தவகையில் இயக்குனர்கள் பாலாஜி மோகன், கே.வி. ஆனந்த் பாடலாசிரியர் மதன் கார்க்கி ஆகியோர் இதன் பாடல்களை டிவிட்டரில் பாராட்டியுள்ளனர்.
இந்த ஆல்பத்தில் மொத்தம் நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அனைத்து பாடல்களையும் நடிகர் தனுஷ் எழுதியுள்ளார். தனுஷ் தயாரித்துள்ள இப்படத்தை ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிடவுள்ளது. இப்படம் உலகம் முழுவதும் வரும் டிசம்பர் 18-ம் தேதியன்று திரைக்கு வருகிறது.
0 comments:
Post a Comment