அனிருத் இசையில் தனுஷ் நடித்திருக்கும் தங்கமகன் படத்தின் பாடல்கள் வரும் நவம்பர் 27-ம் தேதி இணையதளங்களில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த ஆல்பத்தின் டிராக் லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆல்பத்தில் மொத்தம் நான்கு பாடல்களே இடம்பெறுகிறது.
அனைத்து பாடல்களையும் அனிருத் பாடியுள்ளார். அவருடன் இணைந்து தனுஷ் மற்றும் ஸ்வேதா மோகன் ஆகியோர் இரண்டு பாடல்களை பாடியுள்ளனர். வேல்ராஜ் இயக்கியிருக்கும் இப்படம் வரும் டிசம்பர் 18-ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
0 comments:
Post a Comment