கடந்த 2011ஆம் அண்டு இதே நாள் (நவம்பர் 16ஆம்) அனிருத் இசையமைத்து தனுஷ் எழுதி பாடிய ‘கொல வெறி’ பாடல் யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டது. எவரும் எதிர்பாராத வகையில் இப்பாடல் கள்ளிப்பட்டி முதல் கலிபோர்னியா வரை ஒரு கலக்கு கலக்கியது. அந்த ஆண்டிற்கான சிறந்த பின்னணிப்பாடகர் என்ற பிலிம்பேர் விருதை தனுஷ் இப்பாடலுக்காக பெற்றார்.
வெளியான மூன்றே நாட்களில் மட்டும் 1 கோடி மக்களால் கேட்கப்பட்ட மற்றும் ரசிக்கப்பட்ட முதல் தமிழ்ப்பாடல் என்ற சிறப்பை இப்பாடல் பெற்றது. இணையத்தில் இதன் பார்வையாளர்களின் எண்ணிக்கை தற்போது பத்து கோடியை நெருங்கிவிட்டது.
இணையதளங்கள் இல்லாமல் மற்ற சாதனைங்களை பயன்படுத்தி சுமார் 50 கோடி மக்கள் இப்பாடலை ரசித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் உலகமெங்கும் ஒரு நாளில் மட்டும் குறைந்தபட்ச 1 லட்சம் பார்வையாளர்கள் இப்பாடலை கேட்டும் ரசித்தும் வருகிறார்களாம்.
தற்போது இப்பாடல் வெளியாகி நான்கு ஆண்டுகள் நிறைவுபெற்றதையொட்டி “ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்” தனுஷ். மேலும் தனுஷ், அனிருத் ரசிகர்கள் இதனை ‘கொல வெறி’யாய் இணையங்களில் கொண்டாடி வருகின்றனர்
0 comments:
Post a Comment