அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான பிரேமம்மலையாள திரையுலகில் பெரும் புரட்சியை படைத்தது. கேரளாவில் மட்டுமில்லாமல் சென்னை, கோவை, நாகர்கோவில் உள்ளிட்ட நகரங்களிலும் மாபெரும் வசூலை பெற்றுத் தந்தது. கடந்த 150 நாட்களுக்கு முன்னர் வெளியான இப்படம் தற்போதும் சென்னையில் உள்ள பிரபல தியேட்டரில் ஓடிக் கொண்டிருக்கிறது.
இதனிடையில் இப்படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய கடும் போட்டி நிலவி வருகிறது. தமிழில் ரீமேக் செய்ய நடிகர்கள் சூர்யா மற்றும் தனுஷ் இடையே பலத்த போட்டி எழுந்ததாக கூறப்பட்டது. அதன்பின்னர் இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை தனுஷ் பெற்றுவிட்டதாகவும் விஜய் சேதுபதி இப்படத்தில் நடிக்கிறார் என்றும் தகவல்கள் உலா வந்தன.
ஆனால் தற்போது இப்படத்தின் உரிமையை தனுஷ் பெறவில்லை என்று தெரிய வந்துள்ளது. அப்படியென்றால் இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பெற்றது யாரோ? என்ற கேள்வி கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.
சமீபத்தில் பிரேமம்படத்தை பார்த்த செல்வராகவன் தனது பாராட்டுக்களை தெரிவித்துவிட்டு, “அல்போன்ஸ் புத்திரனை தவிர யாரும் இந்த படத்தை ரீமேக் செய்ய வேண்டாம்என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment

 
Top