பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றியைத் தழுவிய படம் மாரி. இதன் இரண்டாம் பாகம் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக நடிகர் தனுஷ் ஏற்கனவே கூறியிருந்தார். இந்நிலையில் இதையே இயக்குனர் பாலாஜி மோகனும் தற்போது உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து பாலாஜி மோகன் கூறுகையில், ” மாரி இரண்டாம் பாகத்திற்கான திரைக்கதை பணிகளை தொடங்கிவிட்டேன். சொல்லப்போனால் 10% திரைக்கதை பணிகள் முடிந்துவிட்டது. முதல் பாகத்தில் இருந்து நடிகர் தனுஷ் மட்டுமே இதன் இரண்டாம் பாகத்திற்கு இதுவரை உறுதிசெய்யப்பட்டுள்ளார்” என்றார். மாரி இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு 2017-ம் ஆண்டுதான் தொடங்கும் என சொல்லப்படுகிறது. அதற்குள் பாலாஜி மோகன் வேறொரு படத்தை இயக்கவுள்ளார்.
0 comments:
Post a Comment