வேலையில்லா பட்டதாரி படத்துக்கு பிறகு வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் தங்கமகன் திரைப்படம் டிசம்பர் 18-ம் தேதியன்று திரைக்குவரவுள்ளது. ‘விஐபி’ படக்குழுவினர் மீண்டும் இணைந்து பணியாற்றியிருப்பதை தவிர இந்த படத்துக்கும் ‘விஐபி’க்கும் வேறு எந்தவித சம்பந்தமும் இல்லை.
தந்தை – மகன் இடையிலான உறவே இப்படத்தின் மையக்கரு. இதில் தனுஷ், மகனாக தமிழ் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வெவ்வேறு காலகட்டங்களில் இவர் சந்திக்கும் இரண்டு பெண்களாக எமி ஜாக்சனும் சமந்தாவும் நடித்துள்ளனர். இவர்கள் இடையிலான காதல் காட்சிகள் மிகவும் சிறப்பாக வந்துள்ளதாம். தனது கேரியரில் மிகச்சிறந்த படங்களில் தங்கமகனும் ஒன்று என நடிகை சமந்தா ஏற்கனவே கூறியுள்ளார்.
அதேசமயம் தனுஷின் தந்தையாக இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரும் தாயாராக ராதிகா சரத்குமாரும் நடித்துள்ளனர். ‘விஐபி’யில் அம்மா – மகன் உறவு எப்படி பேசப்பட்டதோ அதேபோல் இதில் தந்தை – மகன் உறவு பெரிதாக பேசப்படும் என சொல்லப்படுகிறது. அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் நவம்பரில் வெளியாகவுள்ளது.
0 comments:
Post a Comment