வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘தங்கமகன்’ படம் டிசம்பர் 18ஆம் திரைக்கு வருகிறது. மேலும் பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ்
நடித்துள்ள படமும் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இது அடுத்த வருடம்
வெளியாகவுள்ளது.
இதனைத் தொடர்ந்து ‘எதிர்நீச்ச’ல் இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கும் புதிய படத்தில் நடிக்கத்
தயாராகிவிட்டார் தனுஷ். இதில் தனுஷின் தந்தையாக நடிகர் விஜய்யின் தந்தை எஸ். ஏ.
சந்திரசேகர் நடிக்கிறார்.
இதில் தனுஷ் இரட்டை வேடமேற்பதால் ஒருவருக்கு த்ரிஷாவும், மற்றொருவருக்கு அஜித்தின் மச்சினி ஷாம்லியும் ஜோடியாக நடிக்கின்றனர்.
(ஒரு கேரக்டர் இருந்தாலே இரண்டு ஜோடி இருக்கும்.. அப்புறம் இது இல்லாமலா?) மேலும் சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரான நடிகர் சதீஷும்
இப்படத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் காப்பிக்கு ரூ. 35 கோடி மதிப்பில் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனர் மதனுடன் ஒப்பந்தம்
போடப்பட்டுள்ளதாம். இது தனுஷ் படங்களின் வரலாற்றிலேயே பெரும் தொகை என
கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment