அண்மையில் தமிழகத்தில் பெய்த கனமழையால் பலர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். உணவு, உடை, இடம் இன்றி பள்ளிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இவர்களுக்கு உதவிட பெரும் தொகையை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. மேலும் கொடுக்கும் இதயம் படைத்தவர்களிடமிருந்து நிவாரண நிதி, நன்கொடைகள் பெறப்பட்டு வருகிறது.
கார்த்தி சூர்யா விஷால் நன்கொடையளித்ததை அடுத்து நடிகர் தனுஷ் தனது நன்கொடையாக ரூ 5 லட்சத்தை முதல் அமைச்சர் நிவாரண நிதிக்காக நடிகர் சங்கத் தலைவர் நாசரிடம் தற்போது ஒப்படைத்தார்.
இதன் தொடர்ச்சியாக பல முன்னணி நடிகர்கள் முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Top