‘செஞ்சுடுவேன்…’ என லோக்கல் தாதாவாக ‘மாரி’யில் மிரட்டிய தனுஷின் அடுத்த ரிலீஸ் ‘தங்கமகன்’. வேல்ராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தில் சமந்தா, எமி ஜாக்ஸன் என தனுஷுக்கு இரண்டு ஜோடிகள். போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் பரபரப்பாக போய்க் கொண்டிருக்கும் இப்படத்தின் பாடல்களை நவம்பர் 27ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். படம் டிசம்பர் 18ம் தேதி திரைக்கு வருகிறது.
இப்படம் வெளியாகும் அதே நாளில் இன்னொரு சர்ப்ரைஸையும் தன் ரசிகர்களுக்குத் தரவிருக்கிறார் தனுஷ். ஆம்… பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொக்ஷன் பணிகள் போய்க் கொண்டிருக்கின்றன. இப்படத்திலும் தனுஷுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இப்படத்தின் டிரைலரை ‘தங்கமகன்’ படம் ரிலீஸாகும் டிசம்பர் 18ஆம் தேதியன்று திரையரங்குகளிலும் ஒளிபரப்பத் திட்டமிட்டிருக்கிறார்கள் படக்குழுவினர்.
0 comments:
Post a Comment