Latest News


தனுஷ், அனிருத் கூட்டணியில் உருவாகும் படங்கள் மிகவும் எதிர்பார்ப்புக்குள்ளாகி வருகிறது. இவர்களின் கூட்டணி ஐஸ்வர்யா இயக்கிய ‘3’ படத்தில் தொடங்கி ‘விஐபி’, ‘மாரி’, ‘தங்கமகன்’ என இன்று வரை தொடர்கிறது. மேலும் தனுஷ் நடிக்காமல் தயாரிக்கும் படங்களுக்கும் அனிருத் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘தங்கமகன்’ படத்தின் பாடல்கள் நவம்பர் 27ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் தனுஷுடன் சமந்தா, எமி ஜாக்சன், ராதிகா, கே எஸ் ரவிக்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தனது வொண்டர்பார் நிறுவனம் மூலம் தனுஷ் தயாரித்துள்ள இப்படத்தை டிசம்பர் 18ஆம் ரிலீஸ் செய்யவுள்ளனர்.தற்போது இப்படத்தின்ட்ராக் லிஸ்டை வெளியிட்டுள்ளனர். இப்படத்தில் நான்கு பாடல்கள் இடம் பெற்றுள்ளது. அந்த நான்கு பாடலையுமே அனிருத் பாடியுள்ளார். இரண்டு பாடலில் அனிருத்துடன் இணைந்து தனுஷ் பாடியுள்ளார். மற்ற இரண்டு பாடல்களில் ஸ்வேதா மோகன், நிகிதா காந்தி ஆகியோரும் இணைந்து பாடியுள்ளனர்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top