வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘தங்க மகன்’ டிசம்பர் 18ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வருகிற நவ. 27ஆம் தேதி வெளியாகிறது.
முதலில் இப்படம் தயாராகியபோது இது கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் இரண்டாம் பாகம் எனக் கூறப்பட்டது. ஆனால் இது விஐபி 2 அல்ல என்பதை தனுஷ் அப்போது தெளிவுப்படுத்தியிருந்தார்.
தற்போது ‘விஐபி 2’ படம் பற்றிய தகவல்கள் வந்துள்ளன. நிச்சயம் ‘வேலை இல்லா பட்டதாரி’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தனுஷ் தற்போது கைவசம் உள்ள படங்களை முடித்தபின் அதாவது அடுத்த ஆண்டு இறுதியில் இது தொடர்பான அறிவிப்பை வெளியிடவிருக்கிறாராம்.
இதனிடையில் பிரபுசாலமன், தனுஷ், கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ள புதிய படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து பாலாஜி மோகன் இயக்கத்தில் ‘மாரி 2’ படத்தில் நடிக்கவிருக்கிறார் தனுஷ். முதல் பாகம் வெற்றி பெற்றாலும் சில கலவையான விமர்சனங்கள் எழுந்தன. எனவே இரண்டாம் பாகத்தில் அவை நிவர்த்தி செய்யப்படும். மாரி 2 தெளிவாக வரும் என தனுஷ் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment