ஒவ்வொரு ஹீரோக்களும் அதிகபட்ச எல்லாம் வேடங்களில் நடிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஒருவேளை அந்த வாய்ப்பு அமையாவிட்டாலும் முடிந்தவரை காக்கி யூனிபார்ம்… அட அதாங்க… போலீஸ் கெட்டப்பில் நடித்தே ஆக வேண்டும் என்பது அவர்களது பெரும் கனவாக இருக்கும்.
ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார், அஜித், விஜய், விக்ரம், சூர்யா, ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், விஷால் உள்ளிட்ட டாப் ஹீரோக்கள் அனைவரும் போலீஸ் யூனிபார்மில் கலக்கியுள்ளனர். எனவே தங்கள் அபிமான ஹீரோ தனுஷ் போலீஸ் வேடத்தில் நடிக்க மாட்டாரா என இவரது ரசிகர்கள் காத்திருந்தனர். தற்போது அவர்களின் ஆசையை நிறைவேற்ற தனுஷ் முடிவெடுத்துவிட்டார்.
தனுஷ் தயாரித்து சிவகார்த்திகேயன் நடித்த ‘காக்கி சட்டை’ படத்தை இயக்கியவர் துரை செந்தில்குமார். இவர் தனுஷ் நடிக்கும் புதிய படத்தை இயக்கவிருக்கிறார். இதில் தனுஷ் இருவேடமேற்கிறார். இதில் தம்பி தனுஷூக்கு ஜோடியாக அஜித் மச்சினி ஷாம்லி நடிக்கிறார். இப்படத்தில்தான் முதன்முறையாக தனுஷ் போலீஸ் வேடத்தில் நடிக்கவிருக்கிறார் என கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment