தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி மூன்றாவது முறையாக இணையவிருக்கும் வட சென்னை படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இதுவரை ஜி.வி. பிரகாஷ் குமாரை தனது படங்களில் பயன்படுத்தி வந்த வெற்றிமாறன் இதில் சந்தோஷ் நாராயணனை கமிட் செய்துள்ளார்.
பீரியட் படமான இதில், 35 ஆண்டுகால வடசென்னை பகுதியின் நிழலுலக சம்பவங்களை திரையில் கொண்டுவர முடிவு செய்துள்ளார் வெற்றிமாறன். எனவே இப்படத்தை இரண்டு பாகங்களாக எடுத்து வெளியிடவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment