துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிகர் தனுஷ் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடித்துவரும் படம் கொடி. இதில் ஒரு தனுஷ் அரசியல்வாதியாக நடிப்பது நாம் அனைவரும் அறிந்ததுதான். இந்நிலையில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் த்ரிஷாவும் இதில் அரசியல்வாதியாக நடிக்கிறாராம்.
மேலும் இப்படத்தில் இவரது கதாபாத்திரத்தின் பெயர் ருத்ரா. இப்படத்தில் இவர் முதல்முறையாக எதிர்மறையான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படம் வெளியானதும் இந்த கதாபாத்திரம் பெரிதளவில் பேசப்படும் என கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Top