வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணி மூன்றாவது முறையாக இணையவிருக்கும் படம் வட சென்னை. இதில் தனுஷ் ஜோடியாக நடிக்க சமந்தா ஏற்கனவே ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின்படி இப்படத்தில் ஆண்ட்ரியாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம்.
இவர் இப்படத்தில் விலைமாதுவாக நடிக்கப்போவதாகவும் சொல்லப்படுகிறது. மொத்தம் இரண்டு பாகங்களாக வெளிவரவிருக்கும் வட சென்னை படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் தொடங்கவுள்ளது. வேல்ராஜ் ஒளிப்பதிவில் சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைக்கவுள்ளார்.
0 comments:
Post a Comment