ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடித்துவரும் ஆக்ஷன் திரைப்படம் இரு முகன். இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படம் ரம்ஜான் விடுமுறையை மனதில்கொண்டு வரும் ஜூலை 7-ம் தேதி திரைக்குவரும் என ஏற்கனவே கூறப்பட்டது.
இந்நிலையில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் கொடி படமும் இதேநாளில் வெளியாகும் என தற்போது தகவல் கிடைத்துள்ளது. இப்படத்தில் நடிகர் தனுஷ் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். மேலும் த்ரிஷா இதில் முதல்முறையாக தனுஷுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.
0 comments:
Post a Comment