எதிர்நீச்சல், காக்கி சட்டை புகழ் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ், த்ரிஷா நடித்துவரும் கொடி படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் 5-ம் தேதி பொள்ளாச்சியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நடிகர் தனுஷ் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் மார்ச் இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவுக்கு வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடிகை த்ரிஷா ருத்ரா எனும் கதாபாத்திரத்தில் முதல்முறையாக வில்லியாக நடித்து வருகிறார். படம் வெளியானதும் இந்த கதாபாத்திரம் பெரிதளவில் பேசப்படும் என கூறப்படுகிறது
0 comments:
Post a Comment