சங்கமம் படத்தில் அறிமுகமானவர் நடிகை விந்தியா. அதன் பின்னர் தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வந்த இவர், பானுப்பிரியாவின் சகோதரர் கோபால கிருஷ்ணனை குருவாயூர் கோயிலில் திருமணம் செய்தார்.

ஆனால் நான்கே வருடங்களில் இவர் விவாகரத்துக்கு விண்ணப்பித்தார். தற்போது அதிமுக கட்சியில் தேர்தல் பணிகளில் மிகத் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.
இவரின் சமீபத்திய பேட்டியில் ஒரு பிரபல அரசியல்வாதி குறித்து இவர் கூறியதாவது…
“தமிழ் சினிமாவில் முக்கியமான எல்லா நடிகர்களும் புகை பிடிக்கும் காட்சிகளில் நடிக்கிறார்கள். ஆனால் ரஜினி, தனுஷ் மட்டும் சிகரெட் பிடித்தால் அந்த முன்னாள் எம்பி எச்சரிக்கிறார்.
காரணம் அவர் விழிப்புணர்வுக்காக செய்யவில்லை. தன்னுடைய சுய விளம்பரத்திற்காக செய்கிறார்” என முன்னாள் மத்திய அமைச்சர் குறித்து கூறினார் விந்தியா.

0 comments:

Post a Comment

 
Top