பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் ரயில் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படம் நான்கு பாகங்களில் நான்கு வெவ்வேறு கிளைக் கதைகள் கொண்டு உருவாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷ் இப்படத்தில் ரயிலில் வேலை செய்யும் சமையல்காரராக நடித்துள்ளார். மேலும் இப்படத்துக்காக அவர் பல சாகச சண்டை காட்சிகளை ரிஸ்க் எடுத்தும் செய்துள்ளார். தனுஷ் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் இப்படத்தில் ஹரிஷ் உத்தமன், கணேஷ் வெங்கட்ராமன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
0 comments:
Post a Comment