துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடித்துவரும் அரசியல் திரில்லர் படம் கொடி. இதன் படப்பிடிப்பு கடந்த 15 நாட்களாக கோவை மற்றும் பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் நேற்றைய படப்பிடிப்பை மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் இத்தகவலை அறிந்த சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 500–க்கும் மேற்பட்ட மாணவர்கள் தனுஷை காண அந்த கல்லூரியில் திரண்டனர்.
இதைதொடர்ந்து படப்பிடிப்பு சிறிது நேரம் ரத்து செய்யப்பட்டது. பின்னர் கூட்டம் கலைந்ததும் மாலை 6 மணிக்கு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்றது.
0 comments:
Post a Comment