நடிகர் தனுஷ் தற்போது துரை செந்தில்குமார் இயக்கத்தில் கொடி படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதைதொடர்ந்து அவர் கௌதம் மேனன் இயக்கும் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் நடிக்கவுள்ளார்.
அதன்பிறகு மே மாதம் முதல் அவர் வெற்றிமாறனின் வட சென்னை படத்தில் நடிக்கவுள்ளார். ஆனால் இந்த படத்துக்காக அவர் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சில பயிற்சிகளை மேற்கொள்ள இருக்கிறாராம். எனவே வரும் ஏப்ரல் மூன்றாம் வாரத்தில் இருந்தே அவர் வட சென்னை படத்துக்காக தன்னை தயார்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Top