கொடி படத்தை தொடர்ந்து தனுஷ் நடிக்கும் படத்தை கௌதம் மேனன் இயக்குவது உறுதியாகிவிட்டது. இப்படத்துக்கு ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படம் உருவாக ஒரு முக்கியமான காரணம் இருப்பதாகவும் அது என்னவென்பதும் தற்போது தெரியவந்துள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு இயக்குனர் கௌதமின் அப்பா வாசுதேவ் எதிர்பாரா விதமாக மரணமடைந்தார். அச்சமயத்தில் இயக்குனர் கௌதம் வெளிநாட்டில் இருந்திருக்கிறார். அவர் தாயகம் திரும்பும்வரை அவரது தந்தையின் இறுதிச்சடங்கு முழுவதையும் கவனித்துக்கொண்டவர் தனுஷ் தானாம்.
அப்போதிருந்தே இருவருக்குமிடையேயான நட்பு மிகவும் பலமாகிவிட்டதாம். அதன் விளைவுதான் தற்போது இருவரும் படம் செய்ய காரணம் என கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Top