இயக்குனர் பிரபுசாலமன் தற்போது முதல்முறையாக முன்னணி நடிகர் தனுஷை வைத்து பெரிய பட்ஜெட்டில் ஒரு படத்தை இயக்கிக் வருகிறார். முழுக்க முழுக்க ரயிலில் நடைபெறும் சம்பவங்களை அடிப்படையாக்கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் பல சாகச சண்டைக்காட்சிகள் இடம்பெறுகிறதாம்.
இதில் நடிகர் தனுஷ் 70, 80 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் ரயில் மீது உயிரை பணயம் வைத்து ஓடுவது, டூப் இல்லாமல் ஸ்டண்ட் செய்வது என்று தூள் கிளப்பி இருக்கிறார். இதை இயக்குனர் பிரபு சாலமன் சமீபத்திய பேட்டியில் பெருமையுடன் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment