துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடித்துவரும் கொடி படத்தில் முதலில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஷாலினி அஜித்தின் சகோதரி ஷாமிலி ஒப்பந்தமாகியிருந்தார். பின்னர் அவர் நீக்கப்பட்டு ‘பிரேமம்’ மற்றும் ‘காதலும் கடந்து போகும்’ நாயகி மடோனா செபாஸ்டியன் இதில் இணைந்தார்.
தற்போது அவரும் இப்படத்தில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாகவும் அவருக்கு பதிலாக பிரேமம் படத்தின் மற்றொரு நாயகியான அனுபமா பரமேஸ்வரன் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிப்பார் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் த்ரிஷா இப்படத்தில் எதிர்மறையான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
0 comments:
Post a Comment