இயக்குனர் கௌதம் மேனனும் அஜித்தும் முதலில் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ எனும் ஆக்ஷன் படத்தில் இணைவதாக இருந்தது. ஆனால் அந்த கதை தனக்கு சரிவராது என கூறிய அஜித், அதற்கு பதிலாக என்னை அறிந்தால் படத்தில் நடித்தார். இந்த படம் நல்ல வெற்றியைப் பெற்றது.
இந்நிலையில் தற்போது அஜித் கைவிட்ட ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தை தனுஷை வைத்து படமாக்க திட்டமிட்டுள்ளார் கௌதம். இதன் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் தொடங்கவுள்ளது. கௌதமின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்துக்கு இசையமைக்கவுள்ளார்.
0 comments:
Post a Comment