தனுஷ் – பிரபுசாலமன் கூட்டணி முதல்முறையாக ரயில் படத்தில் இணைந்துள்ளனர். இதன் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதில் தனுஷுடன் பணியாற்றியது குறித்து சமீபத்திய பேட்டியில் இயக்குனர் பிரபுசாலமன் பேசியுள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது, ” இப்படத்தில் நடிக்க நடிகர் தனுஷ் கதை கூட கேட்காமல் சம்மதம் சொன்னார். முதல் பத்து நாட்களுக்கு படத்தின் கதை என்ன என்பதே அவருக்கு தெரியாது. போகபோகத்தான் முழு கதையையும் அவரிடம் சொன்னேன். அதை உள்வாங்கிக் கொண்டு சிறப்பாக நடித்தார். உண்மையில் பாராட்டப்பட வேண்டியவர் அவர்” என்றார்.
0 comments:
Post a Comment