கொடி படத்தை தொடர்ந்து தனுஷ் நடிக்கும் படத்தை கௌதம் மேனன் இயக்குவது உறுதியாகிவிட்டது. ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் இரண்டாம் வாரம் கேரளாவில் தொடங்குகிறது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இரண்டே மாதத்தில் நடந்து முடிந்துவிடும் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
ஏனெனில் வெற்றிமாறன் இயக்கும் வட சென்னை படத்தின் படப்பிடிப்பில் நடிகர் தனுஷ் மே முதல் கலந்துகொள்ள இருக்கிறாராம். அதற்குள் இப்படத்தின் படப்பிடிப்பை முடிக்க கௌதமிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இப்படத்துக்கு ‘ஒரு வடக்கன் செல்ஃபி’ புகழ் Jomon T John ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.