தனுஷ் நடிப்பில் கடந்த ஜூலை மாதம் வெளியாகி மாபெரும் வெற்றியைத் தழுவிய மாரி படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தில் நடித்த அத்தனை நடிகர்களும் இதிலும் நடிக்க பாலாஜி மோகனே இப்படத்தையும் இயக்கவுள்ளார்.
இதற்கான கதை விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது. தற்சமயம் தனுஷ், பிரபுசாலமன் இயக்கும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார். அதன்பின் துரை செந்தில்குமார் மற்றும் வெற்றிமாறன் இயக்கும் படங்களில் அவர் நடிக்கவுள்ளார். எனவே மாரி இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு 2017-ம் ஆண்டு தான் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Top